IELTS தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள மாற்றம்!

ஆஸ்திரேலிய அரசு இந்த ஆண்டுமுதல், மாணவர் மற்றும் Temporary Graduate விசாக்களுக்கான IELTS நிபந்தனைகளை மாற்றுகிறது. இதுபற்றிய தகவலையும் IELTSஇல் உங்கள் மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் இக்கட்டுரையில் அறிந்துகொள்ளுங்கள்.

female teenager feeling stressed studing at home.E learning.Home schooling

To be eligible for a graduate visa, you will now need to increase your score to an IELTS 6.5. Source: Moment RF / Carol Yepes/Getty Images

IELTS Academic சோதனையானது listening, reading, writing மற்றும் speaking ஆகிய நான்கு பகுதிகளில் உங்கள் ஆங்கிலப் புலமை எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிடுகிறது.

பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அல்லது மருத்துவம், கற்பித்தல், சட்டம் போன்ற தொழில்முறை அமைப்பில் நீங்கள் பணிபுரிவதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதைப் பார்க்க IELTS பெறுபேறு பயன்படுகிறது.

ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்துகின்ற மாற்றத்தின்படி 2024 முதல், நீங்கள் மாணவர் விசாவைப் பெற விரும்பினால், ஆகக்குறைந்தது IELTS மதிப்பெண் Band 6.0ஐப் பெறவேண்டும்(முன்னர் இது 5.5ஆக காணப்பட்டது).

அதேநேரம் ஆஸ்திரேலியாவுக்கான Temporary Graduate விசா பெற விரும்பினால், உங்களுக்கு IELTS மதிப்பெண் Band 6.5 தேவைப்படும்(முன்னர் இது 6.0 ஆக காணப்பட்டது).
Man working on exam
Don’t let the new English language requirements get you down! Credit: SDI Productions/Getty Images
IELTS பெறுபேறு எப்படி மதிப்பிடப்படுகிறது?
IELTS பெறுபேறு Band 1 (non-user) - Band 9 (expert user) வரை மதிப்பிடப்படுகிறது

தேர்வின் listening மற்றும் reading பகுதிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 40 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்கள் மதிப்பெண் இருக்கும்.

தேர்வின் writing மற்றும் speaking பகுதிகளில் நீங்கள் வெவ்வேறு கல்வித் தலைப்புகளைப் பற்றி பேச வேண்டும் அல்லது எழுத வேண்டும். கேள்விக்கு நீங்கள் எவ்வளவு சிறப்பாக பதிலளித்தீர்கள், உங்கள் யோசனைகளை எவ்வளவு சிறப்பாக இணைத்து ஒழுங்கமைத்திருக்கிறீர்கள் மற்றும் ஆங்கிலத்தின் பல்வேறு அம்சங்களை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது உட்பட, இலக்கணம், சொல்வளம் மற்றும் உச்சரிப்பு அடிப்படையில் பயிற்சி பெற்ற தேர்வாளர்களால் மதிப்பெண் வழங்கப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி உங்கள் ஒட்டுமொத்த band score- ஐக் கணக்கிட பயன்படுத்தப்படுகிறது.
Results of english test
The jump between a 6.0 and a 6.5 may seem small, but it can be challenging. Source: iStockphoto / dimarik/Getty Images
எனது IELTS மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது?
உங்கள் IELTS மதிப்பெண்ணை மேம்படுத்த, முடிந்தவரை ஆங்கிலத்தைப் பயன்படுத்திப் பயிற்சி செய்ய வேண்டும்.
  • IELTS-style கேள்விகள் கொண்ட காணொளித் தொடரான மூலம் பயிற்சிசெய்யலாம்.
  • உங்கள் reading மற்றும் listening ஆகிய இரண்டையும் மேம்படுத்த subtitles கொண்ட ஆங்கில திரைப்படங்களைப் பாருங்கள். பின்னர் writing-ஐ பயிற்சி செய்ய IMDb போன்ற தளத்தில் அவற்றை மதிப்பாய்வு செய்யவும்.
  • தற்போதைய நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்க மற்றும் உங்கள் சொல்வளத்தை அதிகரிக்க, பல்வேறு தலைப்புகளில் செய்தி கட்டுரைகளைப் படிக்கவும். பின்னர் உங்கள் writing திறனைப் பயிற்சி செய்ய உங்கள் சொந்த வார்த்தைகளில் அவற்றை மீண்டும் எழுதவும்.
  • வேறொருவருக்கு சத்தமாகப் படித்துக் காட்டுங்கள். இது உங்கள் புரிதலை மேம்படுத்த உதவும் அதே நேரத்தில் உங்கள் speaking-ஐயும் பயிற்சி செய்யலாம்.
  • வெவ்வேறு சூழ்நிலைகளில் பேசப் பழகுங்கள். நீங்கள் நிதானமாகவும் நம்பிக்கையுடனும் உணர உதவும் விடயங்களைக் கண்டறியுங்கள். , போன்றவற்றைப் பாருங்கள்:
  • கேட்கும் திறனையும் உச்சரிப்புத்திறனையும் வளர்த்துக்கொள்வதற்கு களைக் கேளுங்கள்.
  • IELTS practise சோதனைகள், IELTS கேள்வி வகைகளை நன்கு தெரிந்துகொள்ள உதவும். மேலே உள்ள உத்திகளைப் பயன்படுத்தி நீங்கள் வேலை செய்ய வேண்டிய பகுதிகளை அடையாளம் காண practise சோதனையைப் பயன்படுத்தவும் மற்றும் அந்த திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி செய்யவும். ஆன்லைனில் பல இலவச பயிற்சி சோதனைகள் உள்ளன. என்பதிலிருந்து இதனைத் தொடங்கலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share
Published 2 January 2024 2:43pm
Updated 2 January 2024 3:46pm
By Natalie Oostergo
Presented by Renuka Thuraisingham
Source: SBS


Share this with family and friends