ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன?

Australia Explained - Bankruptcy

Understanding bankruptcy and its consequences in Australia Credit: zoranm/Getty Images

உங்களால் உங்கள் கடன்களை நிர்வகிக்க முடியவில்லை எனில், bankruptcy-ஐ தாக்கல் செய்வது குறித்து சிந்தித்துப்பார்க்கலாம். Bankruptcy-ஐ தாக்கல் செய்வது கடுமையான விளைவுகளையும் கொண்டு வரலாம் என்பதால் Bankruptcy Act-இன் கீழ் வரும் பிற தெரிவுகளைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


பலருக்கு bankruptcy-வங்குரோத்து அல்லது திவால் நிலை என்பது அவமானம் மற்றும் களங்கம் போன்ற உணர்வுகளைக் கொண்டுவருகிறது, ஆனால் நிதி நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த நடவடிக்கையாக இது இருக்கலாம்.

இதற்கு சரியான தொழில்முறை ஆலோசனையை அணுகுவது, bankruptcy உங்களுக்கு சரியான தீர்வுதானா என்பதையும், அதன் விளைவுகளை நீங்கள் புரிந்துகொள்வதையும் உறுதி செய்யும்.
Bankruptcy என்பது ஒரு சட்டப்பூர்வ செயல்முறையாகும், இது பெரும்பாலான கடன்களில் இருந்து உங்களை விடுவிப்பதன் மூலம் நிதிக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற உதவுகிறது, இது உங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்க அனுமதிக்கிறது.

நீங்களாகவே முன்வந்து Bankruptcyஐ தாக்கல் செய்யலாம் அல்லது நீங்கள் பணம் செலுத்த வேண்டியவர்களின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தால் நீங்கள் வங்குரோத்தானதாக அறிவிக்கப்படலாம்.

Bankruptcyஐ தாக்கல் செய்வது கடுமையான விளைவுகளையும் கொண்டு வரலாம் என்பதால் Bankruptcy Actஇன் கீழ் வரும் பிற தெரிவுகளைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் Finderஇன் Senior Money Expert Sarah Megginson.
Coffee shop owner worry about her business
For many, bankruptcy brings feelings of financial shame and stigma, but it’s sometimes the only course of action to relieve financial distress. Credit: gahsoon/Getty Images
உங்களுக்கான முதல் தெரிவு debt agreement -கடன் ஒப்பந்தமாகும். இதன்கீழ் உங்கள் கடன்களில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒரு நிர்வாகி மூலம் செலுத்த ஒப்புக்கொள்வீர்கள். அவர் உங்களுக்கும் உங்கள் கடனாளிகளுக்கும் இடையே உங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். கடன் ஒப்பந்தத்தை உங்கள் கடனாளிகள் ஏற்க விரும்பவில்லை என்றால், அவர்கள் அதை ஏற்க வேண்டியதில்லை.

நீங்கள் Bankruptcy நிலையை அறிவிப்பதற்கு முன் கடன் ஒப்பந்தத்தை கருத்தில் கொள்வது நல்லது, ஆனால் உங்கள் கடனில் சிலவற்றை திருப்பிச் செலுத்த முடிந்தால் மட்டுமே.

இரண்டாவது தெரிவு personal insolvency agreement அல்லது PIA. இது உங்களுக்கும் உங்கள் கடனாளிகளுக்கும் இடையிலான சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும்.

Bankruptcy-ஆனது கடன் ஒப்பந்தங்கள் மற்றும் PIAஇலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது உங்கள் கடன்களில் பெரும்பாலானவற்றை நீக்குகிறது. இருப்பினும், இதன் தாக்கம் அதிகமாக உள்ளது, எனவே முடிவெடுப்பதற்கு முன் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.

திங்கள் முதல் வெள்ளி வரை 1800 007 007 இல் National Debt Helpline-ஐ உதவிக்கு அழைக்கலாம்.

வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் பலரைத் தாக்குகிறது என்பதால் நிதிநெருக்கடி நிலையில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை என்று Sarah Megginson கூறுகிறார்.
Couple having finacial problems
Bankruptcy lasts for three years and one day, but the consequences can last for much longer. Credit: Vladimir Vladimirov/Getty Images
ஆஸ்திரேலிய நிதி பாதுகாப்பு ஆணையம் (AFSA) Bankruptcyஐ தாக்கல் செய்யும் போது, அதற்குரிய செயல்முறையை நிர்வகிக்கும் என விளக்குகிறார் Registered Trustee in Bankruptcy Clare Corrigan.

பின்னர் உங்களுக்கான bankruptcy trustee ஒருவர் நியமிக்கப்படுவார்- வேண்டுமானால் நீங்களே அத்தகைய ஒருவரை பரிந்துரைக்கலாம்.

கடனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரின் நலன்களும் நியாயமான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்வதே trusteeஇன் பணியாகும்.

Trustee திவாலானவரின் நிதியை மதிப்பிடுகின்றது, கடனை அடைப்பதற்காக அவர்களது சொத்துக்களை விற்பதுடன் அவர்களின் நிதி நடத்தையை விசாரிக்கின்றது.

ஒரு bankruptcy காலம் மூன்று ஆண்டுகள் மற்றும் ஒரு நாள் நீடிக்கும், ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

National Personal Insolvency Indexஇல் உங்கள் பெயர் சேர்க்கப்படும். இது உங்கள் credit rating-ஐ பாதிக்கிறது மற்றும் உங்கள் bankruptcy நிலை முடிவடைந்த பிறகும் நிதி அல்லது கடன்களைப் பெறுவதற்கான உங்கள் திறனைப் பாதிக்கிறது.உங்களின் சில சுதந்திரங்களும் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக bankruptcy காலத்தில் அனுமதியின்றி வெளிநாடு செல்வது குற்றம் என்கிறார் சிறு வணிக உரிமையாளரான Mathew.
Australia Explained - Bankruptcy
Bankruptcy lasts for three years and one day, but the consequences can last for much longer. Credit: courtneyk/Getty Images
பொதுவாக, bankruptcy நிலை உங்கள் வேலை செய்யும் திறனை பாதிக்காது. இதைப்பற்றி உங்கள் முதலாளி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

இருப்பினும், நீங்கள் வர்த்தகம், கணக்கியல் அல்லது சட்டம் போன்ற ஒரு துறையில் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

அதேநேரம் நீதிமன்ற அனுமதியின்றி நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாது அல்லது சில பொது பதவிகளை வகிக்க முடியாது.

நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்தினால் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.

Credit Rating Agencies நீங்கள் bankrupt ஆன தேதியிலிருந்து ஐந்து வருடங்கள் வரை உங்கள் bankruptcy நிலையின் பதிவை வைத்திருக்கும். இது கடன்பெறுவதற்கான உங்கள் திறனையும், உங்களிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தையும் பாதிக்கிறது.

இதேவேளை bankruptcy உங்கள் எல்லா கடன்களிலிருந்தும் உங்களை விடுவிக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில்.

நீங்கள் bankruptcyஐ தாக்கல் செய்யும்போது நியமிக்கப்பட்ட உங்கள் trustee, கிரெடிட் கார்டுகள், மருத்துவப் பில்கள் மற்றும் வங்கிக்கடன்கள் போன்ற பெரும்பாலான unsecured debtsஇலிருந்து உங்களை விடுவிப்பார்கள்.

ஏனையவற்றுக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று உங்கள் கடனாளிகளுக்கு பணம் செலுத்தவென அவர்கள் உங்கள் சொத்துக்களை விற்பார்கள் என Sarah Megginson சொல்கிறார். உங்களிடமுள்ள அனைத்து சொத்து விவரங்களையும் நீங்கள் trustee க்கு அறிவிக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் trusteeஐ ஏமாற்ற முயற்சித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

Bankruptcy நிலைக்குச் செல்வது ஒரு அவமானம் என்று பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தும் Clare Corrigan இது குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு சட்டரீதியான நிவாரணம் மற்றும் புதிய தொடக்கத்தை அளிக்கிறது என்கிறார்.

அதுமட்டுமல்ல இந்த நிலையில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share