பூர்வீகக் குடிமக்களின் கலாச்சார நெறிமுறைகளை அறிந்துகொள்வது ஏன் அவசியம்?

Young Adult Indigenous Australian
Woman Dancing

Indigenous cultural protocols are based on ethical principles. Source: iStockphoto / chameleonseye/Getty Images/iStockphoto

Get the SBS Audio app

Other ways to listen

ஆஸ்திரேலியாவின் பூர்வீககுடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சார நெறிமுறைகளை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சார நெறிமுறைகளைக் கவனிப்பது, நாம் அனைவரும் வாழும் நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களைப் புரிந்துகொள்வதற்கும் மரியாதை செய்வதற்கும் ஒரு முக்கியமான படியாகும்.

பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சார நெறிமுறைகளைப் புரிந்துகொண்டு அவர்களுடனான நம் உறவுகளை வளர்ப்பது முக்கியமாகும்.

ஏனென்றால் அவர்கள்தான் இந்நாட்டின் முதல் ஆஸ்திரேலியர்கள். பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் இந்நிலத்தைப் பற்றிய நெருக்கமான அறிவைக் கொண்டுள்ளனர், மேலும் நமது சுற்றுச்சூழலைக் கவனித்துக்கொள்வது பற்றி அவர்கள் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்க முடியும் என்கிறார் ACT பிராந்தியத்தின் Ngunnawal பூர்வீக குடியின மூப்பர் Caroline Hughes.
AC Milan v AS Roma
Aboriginal dancers perform during the welcome to country before the friendly between AC Milan and AS Roma at Optus Stadium on May 31, 2024 in Perth, Australia. Credit: Paul Kane/Getty Images
அவர்களது கலாச்சார நெறிமுறைகளைக் கவனிப்பதன் மூலம், முதல் ஆஸ்திரேலியர்கள் நிலத்துடனும் அவர்களின் பழங்கால நடைமுறைகளுடனும் கொண்டிருக்கும் பிரிக்கமுடியாத தொடர்பை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று கூறுகிறார் SBS’ Elder in Residence Rhoda Roberts.

‘‘Indigenous Australian’’ பூர்வீக ஆஸ்திரேலியர் என்ற சொல் பூர்வீகக்குடி மக்களையும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களையும் உள்ளடக்கியது, ஆனால் பூர்வீகக்குடியினர் தங்கள் அடையாளத்துடன் தம்மை சிறப்பாக இணைக்கும் வழிகளில் தங்களைக் குறிப்பிடுகின்றனர்.

உதாரணமாக Caroline Hughes தன்னை ஒரு Ngunnawal பெண் என்று குறிப்பிடுகிறார்.

அதேபோன்று நியூசவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியாவில் பூர்வீகக்குடியினர் ஒருவரை அடையாளம் காண '‘Koori' அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, குயின்ஸ்லாந்தில் “Murray” பயன்படுத்தப்படுகிறது மற்றும் டாஸ்மேனியாவில் ‘'Palawa’’ பயன்படுத்தப்படுகிறது.
Both the Aboriginal and Torres Strait Islander flags are flown alongside the Australian national flag to acknowledge these distinct Indigenous peoples.
Both the Aboriginal and Torres Strait Islander flags are flown alongside the Australian national flag Source: AAP / AAP Image/Mick Tsikas
இதேவேளை டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சாரத்திற்கும் பூர்வீகக் குடிமக்களின் கலாச்சாரத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என விளக்குகிறார் Torres Strait Islander மற்றும் Assistant National Secretary of the Maritime Union of Australia Thomas Mayo.

தனித்துவமான பூர்வீகக்குடி மக்களை அங்கீகரிப்பதற்காக அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் கொடிகள் ஆஸ்திரேலிய தேசியக் கொடியுடன் பறக்கவிடப்படுகின்றன.

‘Indigenous’, ‘Aboriginal’, ‘Torres Strait Islander’ மற்றும் ‘Country’ போன்ற சொற்களை பெரிய எழுத்து மூலம் குறிக்கப்பட்ட சரியான பெயர்ச்சொற்களாகக் குறிப்பிடுவதன் மூலம் நாங்கள் மரியாதை காட்டுகிறோம். அவற்றை சுருக்கி அழைப்பது பொருத்தமற்றது என Caroline Hughes விளக்குகிறார். 
‘Custodian’ மற்றும் ‘Elder’ போன்றவையும் பெயர்ச்சொற்களாகும். Elders என்பவர்கள் பூர்வீகக்குடியின மக்களின் மரியாதைக்குரிய சமூக உறுப்பினர்கள். அவர்கள் ஆழமான கலாச்சார அறிவைக் கொண்டுள்ளனர் என்கிறார் பூர்வீகக்குடியின மூப்பர் Rhoda Roberts.

பூர்வீகக்குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் தமது முதியவர்களை ‘‘Aunty’’ மற்றும் ‘Uncle’ என்று குறிப்பிடுவதன் மூலம் மரியாதை காட்டுகிறார்கள். பூர்வீகக்குடியினர் அல்லாதவர்களும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தலாமா என்று முதலில் கேட்டுவிட்டு அவ்வாறு அவர்களை அழைப்பது பொருத்தமானது.

பூர்வீகக்குடியின மூப்பர்கள் ‘Welcome to Country’ஐ வழங்குமாறு கேட்கப்படுகிறார்கள். 1980 களில் Rhoda Robertsஆல் உருவாக்கப்பட்ட ‘Welcome to Country’ என்பது கடந்த காலத்தை கௌரவிக்கும் வகையில் நிகழ்வு ஒன்றின் தொடக்கத்தில் வழங்கப்படும் ஒரு பாரம்பரிய வரவேற்பு ஆகும். இது ஒரு பேச்சு வடிவிலோ, நடனம் அல்லது smoking ceremony வடிவிலோ அமையலாம்.

அதேபோல், ‘Acknowledgement of Country’ என்பது குறிப்பிடத்தக்க கூட்டங்களில் வழங்கப்படும் முக்கியமான வரவேற்பு நெறிமுறையாகும்.

ஒருவரது பின்னணியை விசாரிக்கும் போது, பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் அனுபவித்த வரலாற்று துயரங்களை ஒப்புக்கொள்வது முக்கியம் என Caroline Hughes கூறுகிறார்.
An Indigenous performer participates in a smoking ceremony.
An Indigenous performer participates in a smoking ceremony. Source: Getty / Cameron Spencer/Getty Images
இருப்பினும், கலாச்சார நெறிமுறைகளைப்பற்றிப் புரிந்துகொள்ளும்போது மரியாதைக்குரிய கேள்விகளைக் கேட்க பயப்பட வேண்டாம் என்கிறார் Thomas Mayo.

கலாச்சார நெறிமுறைகளைப் புரிந்துகொள்வதன் அடிப்படையானது உலகளாவியது மற்றும் அடிப்படையில் உங்கள் சக மனிதனை அங்கீகரிப்பது பற்றியது என நினைவூட்டுகிறார் SBS’ Elder in Residence Rhoda Roberts.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

This content was first published in May 2022.

Share